காதல் வலை வீசி ஏமாற்றிய ஆசிரியை.. பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

Chennai Death
By Irumporai Oct 13, 2022 05:15 AM GMT
Report

அம்பத்தூரில் கடந்த சில மாதங்கள் முன்னதாக 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் தற்கொலை

சென்னை அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் கிருஷ்ணகுமார். கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ண குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மாணவனுக்கு படிப்பு சரியாக வராததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது.

ஆசிரியையுடன் காதல்

ஆனால் சமீபத்தில் கிருஷ்ணகுமார் தனது பள்ளி ஆசிரியை ஒருவரோடு நெருக்கமாக இருக்கும் போட்டோவை போலீஸாரிடம் காட்டிய கிருஷ்ணகுமாரின் பெற்றோர் தனது மகன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

காதல் வலை வீசி ஏமாற்றிய ஆசிரியை.. பள்ளி மாணவன் தற்கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் | Teacher Who Cheated In Love Student Suside

சர்மிளாவிடம் ட்யூசன் வந்த கிருஷ்ணகுமாருடன் சர்மிளா நெருங்கி பழகியுள்ளார். இருவரும் காதலித்ததாகவும், மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

விரக்தியில் தற்கொலை

இதனால் விரக்தியடைந்த மாணவன் கிருஷ்ணகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சர்மிளா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.