தற்கொலை முயற்சி - 9ம் வகுப்பு மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!
9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியியல் தொல்லை
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி இந்த மாணவி வீட்டிலிருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு மயக்க நிலைக்கு சென்றார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிய மாணவியிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் மாத்திரைகளை உட்கொண்டது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது "தான் படிக்கும் பள்ளியில் உள்ள ஆல்பின் பிரேம்குமார் என்ற உடற்கல்வி ஆசிரியர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக" அந்த மாணவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆசிரியர் கைது
இதனால் தான் விபரீத முடிவு எடுத்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்,
விசாரணை மேற்கொண்டதில் "உடற்கல்வி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமார் கடந்த சில மாதங்களாக மாணவியிடம் பழகி வந்ததும், ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது.
தற்கொலை முயற்சி; 9ம் வகுப்பு மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர் ஆல்பின் பிரேம்குமாரை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.