சின்ன சின்ன சேட்டை…டீச்சருக்கு நச்சுனு முத்தம் - கடுப்பான 90ஸ் கிட்ஸ்

Viral Video Funny viral video
By Nandhini Sep 14, 2022 06:25 AM GMT
Nandhini

Nandhini

in கல்வி
Report

வகுப்பறையில் சிறுவன் ஆசியரியருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

குழந்தைகளின் குறும்புத்தனம் 

பொதுவாக சிறுவர்கள் என்றாலே சின்ன சின்ன சேட்டைகளை செய்வது வழக்கமான ஒன்று அதிலும் அவர்கள் செய்யும் குறும்புத்தன சேட்டைகளை பெற்றோர் முதல் உறவினர்கள் , ஆசியரியர்கள் என அனைவரும் கண்டித்தாலும் பெரும்பாலானோர் அதை ரசிப்பது உண்டு.

குறிப்பாக குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களின் அரவணைப்பு என்பது இன்றியமையாத ஒன்று. தங்கள் குழந்தைகள் போன்று பார்த்து கொள்ளும் ஆசிரியர்கள் இன்றைய பெற்றோர்களின் வரப்பிரசாதம் தான்.

இந்த நிலையில் வகுப்பறையில் சேட்டை செய்த சிறுவனை அழைத்து செல்லமாக கண்டித்த பெண் ஆசிரியைக்கு சிறுவன் முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தான் 90 கிட்ஸ்களின் மனதை புண்ணாகியுள்ளது.

ஆசிரியைக்கு முத்தம் 

வகுப்பறையில் சிறுவன் குறும்புத்தனத்தால் தன் ஆசிரியையிடம் மாட்டிக் கொண்டான். அப்போது அந்த சிறுவனை அன்பாக கண்டித்தார் அந்த ஆசிரியை.

Kissing

அப்போது அந்த சிறுவன் திடீரென ஆசிரியையிடம் நான் சேட்டை செய்யமாட்டேன் எனக் கூறி திடீரென கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இதை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் நாங்கள் படித்த காலத்தில் இது போன்ற டீச்சர் இல்லை என்று ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.