Wednesday, Jul 16, 2025

பதினொன்றாம் வகுப்பு மாணவருடன் பள்ளி ஆசிரியை ஒட்டம்? - அதிர்ச்சியில் பெற்றோர்

teacherstudent trichycrime teacherrunsawaywithstudent
By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

திருச்சி, துறையூரை அடுத்த மதுராபுரி கிராமத்தை சோ்ந்த ஞானமலா் என்பவரின் 17 வயதான மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவன் தனது பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறி மாலையில் வெளியில் சென்றுள்ளார்.

பதினொன்றாம் வகுப்பு மாணவருடன் பள்ளி ஆசிரியை ஒட்டம்? - அதிர்ச்சியில் பெற்றோர் | Teacher Runs Away With School Student In Trichy

அதன் பின்னர் இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் மாணவரை தேடிப் பெற்றோர் அலைந்துள்ளனர்.

அவர் எங்கேயும் கிடைக்கவில்லை, அவரது நண்பர்களிடம் விசாரிக்கையில் அவர்களுடனும் மாணவர் விளையாட வரவில்லை என தெரிய வந்ததுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு மாணவருடன் பள்ளி ஆசிரியை ஒட்டம்? - அதிர்ச்சியில் பெற்றோர் | Teacher Runs Away With School Student In Trichy

அதே சமயம் மாணவர் படித்து வரும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் 26 வயது ஆசிரியையும் அதே நாளில் மாயமாகி இருந்தது தெரிய வந்ததையடுத்து மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மாணவரும் ஆசிரியையும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும் சேர்ந்து சென்றிருக்கலாம் என்ற ஐய்யம் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.