பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை - விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனுடன் காதல்
சென்னையிலுள்ள பள்ளி ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ஒருவருடன் அந்த ஆசிரியை நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தனது பணியை ராஜினாமா செய்தார் ஆசிரியை. இதற்கு மறுநாள் அந்த மாணவனும் பள்ளிக்கு வரவில்லை. மேலும், வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர்.
போலீசார் விசாரணை
அதில், மாணவன் மற்றும் ஆசிரியை இருவரும் நீலகிரி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆசிரியையிடம் இருந்து தன்னை பிரித்தால் உயிரை விட்டுவிடுவேன் என அந்த மாணவன் போலீஸாரிடம் கூறியுள்ளான். இதனையடுத்து ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் நெருங்கிப் பழகி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தாழம்பூர் போலீஸார் இந்த வழக்கை சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். மாணவன் மைனர் என்பதால் ஆசிரியைமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.