மாணவர்களை ஷூ காலால் நெஞ்சில் உதைத்த ஆசிரியர் - பதபதைக்கும் காட்சிகள்!

Tamil nadu Viral Video Salem
By Swetha Aug 12, 2024 04:35 AM GMT
Report

ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

மாணவர்கள்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

மாணவர்களை ஷூ காலால் நெஞ்சில் உதைத்த ஆசிரியர் - பதபதைக்கும் காட்சிகள்! | Teacher Kicked Students For Not Winning The Game

அப்போது,கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை என்பவர் மாணவர்களை வரிசையாக தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து,

 உதைத்த ஆசிரியர்

கன்னத்தில் அறைந்துள்ளார். ஆசிரியர் ஆக்ரோஷமாக செயல்படும் தொடர்பான அதிர்ச்சிகர வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மாணவர்களை ஷூ காலால் நெஞ்சில் உதைத்த ஆசிரியர் - பதபதைக்கும் காட்சிகள்! | Teacher Kicked Students For Not Winning The Game

மேலும், அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறைக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.