டியூசனுக்கு வந்த மாணவியை காதலனுக்காக விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியை...நேர்ந்த விபரீதம்!
டியூசனுக்கு சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்ஆசிரியையும் அவரது காதலனும் கைது செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
டியூஷன்
சென்னையில் தி. நகர் பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமி டியூஷன் வகுப்பில் தினமும் சென்று படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை ஒரு நாள் டியூசன் ஆசிரியை வெளியே போய்விட்டு வரலாம் என்று அழைத்திருக்கிறார்.
அந்த மாணவியும் ஆசிரியைதானே என்று நம்பிக்கையுடன் சென்றிருக்கிறார். 29 வயது ஆசிரியை தனது காரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே ஆசிரியையின் காதலர் இருந்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை
சிறுமியை மிரட்டி ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் சிறுமியை மிரட்டி நகை ,பணம் பறித்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும்,
அவர்கள் தி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அந்த புகாரின் பேரில் ஆசிரியை அவரது காதலன் இருவரையும் கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்திருக்கிறது. விசாரணைக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து டியூசன் ஆசிரியை அவரது காதலர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் டியூசன் ஆசிரியருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவரது காதலருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி எம். ராஜலட்சுமி தனது தீர்ப்பு குறிப்பிட்டிருக்கிறார்.