தலைக்கேறிய கோபம்...மாணவனின் பற்களை உடைத்த கொடூரம் - தப்பியோடிய ஆசிரியர் கைது!
பள்ளியில் மாணவனின் பல்-ஐ உடைத்துவிட்டு தப்பியோடிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பற்களை உடைத்த..
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்களை முடித்தீர்களா? என அறிவியல் பாட ஆசிரியரான முகமது ஆசிப் கேட்டுள்ளார்.
அந்த சமயத்தில் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் வீட்டுப்பாடத்தை முடிக்க முடியவில்லை என்று சிறுவன் கூறினார். இதனால் கடும் கோபமடைந்த ஆசிரியர் அச்சிறுவனை கட்டையால் தாக்க தொடங்கினார். இதில் அச்சிறுவன் மயங்கி கீழே விழுந்தார்.
ஆசிரியர் கைது
சிறுவனின் வாய் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவன் மயங்கி விழுந்ததும் பார்த்து பதறிய ஆசிரியர் முகமது ஆசிப் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தனர்.
உடனே விரைந்து வந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை மீட்டு மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆசிரியர் முகமது ஆசிபை கைது செய்தனர்.