பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்
School teacher
Ramanathapuram
By Petchi Avudaiappan
முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஹபீப் முகம்மது மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹபீப் முகம்மதை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.