ஆசிரியர் தின விழாவில் மாணவன் செய்த செயல்...; முதுகில் ஓங்கி அடித்த ஆசிரியர் - வைரலாகும் வீடியோ
ஆசிரியர் தின விழா
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று ஆசிரியர் தின விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று ஒரு பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ஆசிரியர்கள் வரிசையாக மாணவர்கள் முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் அங்கு வந்த மாணவர் ஒருவர் கையில் ஸ்பிரே எடுத்து, நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியர்கள் தலையில் அடித்தார்.
இதனால், கடுப்பான ஒரு ஆசிரியர் எழுந்து, அந்த மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்து, முதுகில் சக மாணவர்கள் முன்னிலையில் ஓங்கி அடித்தார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் அவர்களுடைய பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Happy teachers day ?? pic.twitter.com/pl47e5VawA
— Deba (@being__anxious) September 5, 2022