நடிகர் விவேக்கின் உருவத்தை மரக்கிளையாலேயே வரைந்த ஆசிரியர் - குவியும் பாராட்டு
நடிகர் விவேக் நினைவு தினத்தை முன்னிட்டு பிரஷ்க்கு பதிலாக மரத்தின் "கிளையாலேயே" மரங்களின் காதலன் நடிகர் விவேக் உருவத்தை வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் நடிகர் விவேக் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் வகையிலும்,
நடிகர் விவேக் அவர்களின் கனவான மரங்கள் நடுதல் பற்றி விழிப்புணர்வு குறிக்கும் வகையிலும் விவேக் விருப்பமான அந்த மரத்தின் "கிளையாலேயே" சார்ட் பேப்பரில் நடிகர் விவேக் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வரைந்தார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், பசுமை மீது கொண்ட அக்கறையாளும் நடிகர் விவேக் அவர்கள் மரம் நடுதல் தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாகவும், மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும் விளங்கியவர் ஆவார்.
நடிகர் விவேக் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், மக்களிடையே "மரம் நடுதல்" பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரஷ் பயன்படுத்தாமல் வெறும் "மரத்தின் கிளையை " கொண்டு அந்த மரக்கிளையை நீர் வண்ணத்தில் தொட்டு நடிகர் விவேக் உருவத்தை 20 நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் வரைந்தார்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓவியத்தை பார்த்து ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனார்கள்.