மாணவனுடன் தகாத உறவு; நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை செய்த காரியம் - அதிர்ச்சி!

United States of America Sexual harassment World
By Jiyath Aug 27, 2023 12:23 PM GMT
Report

மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்சி மாநிலத்தில் உள்ள சட்டனூக பகுதியில் மத்திய உயர் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கேசி மெக்ராத் (28) என்ற பெண் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மாணவனுடன் தகாத உறவு; நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை செய்த காரியம் - அதிர்ச்சி! | Teacher Charged In Student Sex Assault Case

சமீபத்தில் மாதாமாதம் அளிக்கப்படும் நல்லாசிரியை விருதை கேசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுடன் பேசி, பழகி நல்லுறவை ஏற்படுத்தி அதனை வளர்ப்பது எனக்கு விருப்பமான ஒன்று" என ஒரு நிருபரிடம் கேசி தெரிவித்துள்ளார்.

தகாத உறவு 

இந்நிலையில் கேசி சில மாதங்களுக்கு முன்பு தனது மாணவர்களில் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். இதனால் கடந்த மார்ச் மாதம் இவர் பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாணவனுடன் தகாத உறவு; நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை செய்த காரியம் - அதிர்ச்சி! | Teacher Charged In Student Sex Assault Case

நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் மீது ஹாமில்டன் கவுன்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியபோது கேசி மீது சாட்டப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 18 வயது நிரம்பாத சிறுவன் என தெரிந்திருந்தும் அச்சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டு பெருங்குற்றம்" புரிந்ததால் கேசி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. சட்டப்படி கேசிக்கு அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.