வெறிச்செயல்; தலைமை ஆசியரின் கையை கடித்து குதறிய ஆசிரியை - என்ன நடந்தது?
பள்ளி தலைமை ஆசிரியரின் கையை வேதியல் ஆசிரியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையை கடித்த ஆசிரியை
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ பணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்டெல்லா என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மாணவ, மாணவிகளை அடிக்கடி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியை ரத்னா ஜெயந்தி என்பவர், வேதியியல் ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது வேதியியல் ஆசிரியை, தலைமை ஆசிரியரின் கையை கடித்துள்ளார்.
விசாரணை
மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வைத்து முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், அதே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.