ஆசிரியர் உட்பட 3 பேர் மீது பள்ளி மாணவன் காவல்நிலையத்தில் புகார்!
ஆசிரியர்கள் உள்பட 3 பேர் தாக்கியதாக கூறி மாணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சேங்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் மணப்பாறை – குளித்தலை சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 2 மாதங்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகின்றது.
மேலும் மாணவனை அலுவலகத்திற்கு வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகவும் அதனால் மாணவன் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவனை அவரது பெற்றோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை சென்று மாணவன் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் மணப்பாறை போலீசார் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுத்திடக்கோரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.