தேர்வு அறையில் +2 மாணவிகளிடம் அத்துமீறல் -ஆசிரியரின் வெறிச்செயல்
தேர்வு அறையில் +2 மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் அத்துமீறலில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று பிளஸ்-2 வகுப்பிற்கான கடைசி தேர்வு நடைபெற்றது. அதன்படி, திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
ஒரு வகுப்பறையில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள் மற்றும் 5 மாணவர்கள் எழுதினர். அந்த அறைக்கு தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் சம்பத்குமார் சோதனை செய்வது போல் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியைடந்த மாணவிகள் தேர்வு முடிந்து வெளியே வந்த அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்மந்தபட்ட ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பத்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.