மாணவிகளிடம் ஆபாச பேச்சு, பாலியல் தொல்லை - சிக்கிய அறிவியல் ஆசிரியர்
மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளால் கொச்சையாக பேசி பாலியல் தொந்தரவு அளித்த அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கருர் மாவட்ம் குளித்தலை அடுத்த தோகைமலை பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக மருதை (59) பணியாற்றி வருகிறார்.
இவர் திருமணமாகாதவர் இப்பள்ளியில் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர் , மாணவிகளிடம் அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் ஆசிரியர் கைது
அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் விசாரணை செய்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.