27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி - டீ பிரியர்கள் குஷி!
தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை முதல் தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இனிப்பு, காரம் விற்பனை செய்யப்படும் கடைகளும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.