பஜ்ஜி, போண்டாவை பேப்பரில் வைத்து சாப்பிடுறீங்களா? அதிக ஆபத்து இருக்குதாம்
பஜ்ஜி, வடை, போண்டா இவற்றினை செய்தித்தாள்களில் பார்சல் செய்து கொடுக்கும் வழக்கம் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வருகின்றது.
செய்தித்தாள்களில் பஜ்ஜி, வடை
இந்திய மாநிலங்களில் பெரும்பாலும் பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். பெரும்பாலான டீ கடைகளில் இந்த பலகாரங்களை பார்சல் செய்து கொடுக்கின்றனர்.
இவ்வாறு தின்பண்டங்களை பார்சல் செய்து கொடுப்பது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செய்தும் கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சி மையில் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இதில் பல்வேறு நிறமிகள், ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுகின்றது.
பொரித்த உணவுகளை பேப்பரில் வைத்து சாப்பிடும் போது இதனால் பக்கவிளைவு அதிகமாக இருப்பதுடன், மேலும் டீ கடைகளில் இருக்கும் செய்தித்தாள்களில் தூசி, அழுக்கும் இருக்கும் என்றும் அது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்தித்தாளில் கலக்கப்படும் வேதிப்பொருள் செரிமான பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் பிரச்சனையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேப்பருக்கு பதிலாக வாழை இலை, பட்டர் பேப்பர், சில்வர் மற்றும் கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.