நாளை முதல் அதிரடியாக உயரும் டீ, காபி விலை- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Chennai
By Yashini Aug 31, 2025 10:12 AM GMT
Report

சென்னையில் டீ, காபி விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பால், டீ தூள் மற்றும் காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை முதல் டீ விலை 12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும், காபி விலை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

மேலும் போண்டா, பஜ்ஜி, சமோசா அனைத்தும் 15 ரூபாயாக விற்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நாளை முதல் டீக்கடை விலை பட்டியல் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நாளை முதல் அதிரடியாக உயரும் டீ, காபி விலை- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு | Tea Coffee Prices To Rise After 3 Years

  • பால் - ரூ.15
  • லெமன் டீ - ரூ.15
  • காபி - ரூ.20
  • ஸ்பெஷல் டீ - ரூ.20
  • ராகி மால்ட் - ரூ.20
  • சுக்கு காபி - ரூ.20
  • பூஸ்ட் - ரூ.25
  • ஹார்லிக்ஸ் - ரூ.25
  • பார்சல் கப் டீ - ரூ.45
  • பார்சல் கப்-பால் - ரூ.45
  • பார்சல் கப் காபி - ரூ.60
  • பார்சல் ஸ்பெஷல் கப் டீ - ரூ.60
  • பார்சல் ராகி மால்ட் - ரூ.60
  • பார்சல் சுக்கு காபி - ரூ.60
  • பார்சல் பூஸ்ட் - ரூ.70
  • பார்சல் ஹார்லிக்ஸ் கப் - ரூ.70