டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1750.85 கோடி அபராதம் - இப்படி மாட்டிகிட்டியே பங்கு!

United States of America
By Sumathi Nov 29, 2023 05:56 AM GMT
Report

டிசிஎஸ் நிறுவனத்துக்கு சுமார் 210 மில்லியன் டாலர் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ்

டாடா குழுமத்தின் ஐடி துறை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அமெரிக்காவில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரபலமான DXC டெக்னாஜிஸ் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை டிசிஎஸ் திருடியதாகத் தொடரப்பட்ட வழக்கில்,

tcs

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டாலாஸ் நீதிமன்றம் டிசிஎஸ் தவறு செய்துள்ளதை உறுதி செய்துள்ளது. DXCஇன் உள்ளடக்கத்தை அணுகிய சில டிசிஎஸ் ஊழியர்கள் அதிலிருந்த தரவுகளை தங்கள் குழுவுக்காக, அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளனர்.

டாப் பணக்கார குடும்பங்கள்; பாதி இந்தியா இவங்ககிட்டதான், இல்லாத விஷயமே இல்ல - யாரெல்லாம் தெரியுமா?

டாப் பணக்கார குடும்பங்கள்; பாதி இந்தியா இவங்ககிட்டதான், இல்லாத விஷயமே இல்ல - யாரெல்லாம் தெரியுமா?

அபராதம்

டிசிஎஸ் ஊழியர்களில் ஒருவர் DXC ஊழியர் பற்றிய விவரத்தையும் மின்னஞ்சலில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்ததால் இந்த மோசடி தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, நிறுவனத்திற்கு சுமார் 210 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கும் மேல்) அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.