நாய் வளர்த்தால் வரி கட்ட வேண்டும் : அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

By Irumporai Jan 17, 2023 04:50 AM GMT
Report

வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய் வளர்த்தால் வரி கட்ட வேண்டும் என மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

நாய் வளர்த்தால் வரி

இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாய் வளர்த்தால் வரி கட்ட வேண்டும் : அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி | Tax To Dogs In Madhya Pradesh State

  பொதுமக்கள் அதிர்ச்சி 

மக்களின் பாதுகாப்பு கருவி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. நாய் வளர்ப்பவர்களுக்கு வரி கட்டுவதை சட்டமாக இயற்றி வரும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அனைத்து வளர்ப்பு நாய்களும் மாநகராட்சிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அரசின் இந்த  அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.