சொகுசு காருக்கு வரி விலக்கு - தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு

By Irumporai Aug 04, 2021 04:55 AM GMT
Report

வெளிநாட்டில் இருந்து வாங்கிய காருக்கு நுழைவு வரியாக ரூ.60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 2015ல் நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஏற்கனவே விஜய் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் உத்தரவு பிறப்பிக்கிறார்.

2015இல் சொகுசு காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். 50% வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்திற்கு 2015 அக்டோபரில் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் ஆணையிடப்பட்டது. நுழைவு வரி விலக்கு கேட்ட விஜய்யை விமர்சித்ததுடன் ஒரு லட்சம் அபராதம் விதித்து இருந்தார் நீதிபதி சுப்பிரமணியம்.

விஜய் மேல்முறையீட்டை விசாரித்த ஐகோர்ட் ஒரு லட்சம் அபராதம் விமர்சனத்திற்கு இடைக்கால தடை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.