அதானி நிறுவனத்தில் திடீர் அதிரடி ரெய்டு - பரபரப்பு
அதானி வில்மர் நிறுவனத்தில் மாநில கலால்துறை, வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதானி வில்மர் நிறுவனம்
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன. இதனால் கடந்த வாரம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 2200 கோடி டாலர் குறைந்தது. இதனையடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருந்து 7வது இடத்துக்கு பின்தங்கினார்.

கவுதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 9,300 கோடி. இமாச்சல பிரதேசத்தில் அதானி வில்மர் மீதான சோதனை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரெய்டு
பழங்களுக்கான குளிர்பானக் கடைகளில் இருந்து மளிகைப் பொருட்கள் விநியோகம் வரை மொத்தம் ஏழு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மேலும், ஃபார்ச்சூன் பிராண்டின் கீழ் அதன் சமையல் எண்ணெய்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.
இந்நிலையில், அதானி வில்மர் நிறுவனத்தில் மாநில கலால்துறை, வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஜிஎஸ்டி செலுத்தாத காரணத்தால் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.