புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க போகுதா? முதலமைச்சருடன் டாடா குழும தலைவர் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் குஜராத்தில் உள்ள போர்ட் நிறுவனத்தை வாங்கியது ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் நேற்று நடந்த சந்திப்பில் மீண்டும் சென்னை போர்ட் தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்குவது குறித்தும், அங்கு சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, மற்றும் டாட்டாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
டாட்டா குழுமத்தின் தலைவர் திரு. என்.சந்திரசேகரன் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர்.