சர்வதேச உணவு தரவரிசை பட்டியல்: மாஸ் காட்டிய இந்திய சட்னி - எந்த இடம் தெரியுமா?
உணவு தரவரிசை பட்டியலை டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
டேஸ்ட் அட்லஸ்
சர்வதேச அளவில் உணவு தரவரிசை பட்டியலை டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகத்தில் சிறந்த 100 உணவுகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் சட்னி வகைகள் 42-வது இடத்தை பெற்றுள்ளது. இதில் கொத்தமல்லி சட்னி 47-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் மாம்பழ சட்னி 50-வது இடத்தை பிடித்துள்ளது.
மாம்பழ உணவு
இந்த பட்டியலில் முதல் இடத்தை லெபனானின் பூண்டு பேஸ்ட் பெற்றுள்ளது . இந்த பேஸ்ட் அசைவ உணவுகளில் பயன்படுத்தப் படுகிறது. இரண்டாவது இடத்தை அஜிகிரியோலோ அல்லது சல்சாடி அட்ஜி என்று சொல்லப்படும் ஒரு சாஸ் பிடித்துள்ளது.
இந்த அஜிகிரியோலோ சாஸும் அசைவ உணவுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. மேலும், மாம்பழ உணவு தரவரிசை பட்டியல் இந்தியா முதல் மற்றும் 5-ம் இடங்களை பிடித்து அசத்தியுள்ளது.