நாளை டாஸ்மாக் திறப்பு.. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதால்
மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கில் சில தளர்வுகளோடு நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் நோய்தொற்று பரவல் கட்டுக்குள் வராதவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மற்ற 27 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராடுவோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக அலுவலகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும். கொரோனோ காரணமாக கட்சியினர் வீடுகளிலே கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.