டாஸ்மாக் கடைகளில் இனி இது ரொம்ப அவசியம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Madurai
By Sumathi Aug 24, 2023 04:33 AM GMT
Report

டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்

மதுரையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில் 'தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளில், 21 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே மது அருந்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

டாஸ்மாக் கடைகளில் இனி இது ரொம்ப அவசியம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Tasmac Stores Price Detail Madurai High Court

தொடர்ந்து, திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் என்பவர், 'டாஸ்மாக் கடைகள், பார்கள் மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணிவரை மட்டும் செயல்பட உத்தரவிட வேண்டும்' என மனு அளித்திருந்தார்.

விலை விவரம்

இதனை விசாரித்த உயிர்நீதிமன்றம், "மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

மது பாட்டில்களில் விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் போன்றவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவித்து கண்காணிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனுதாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விலை விவரப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி நிரந்தரமாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீீதிபதிகள் முடித்து வைத்தனர்.