சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல் - காரணம் என்ன ?

TASMAC
By Irumporai Feb 05, 2023 03:12 AM GMT
Report

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வள்ளலார் தினம்

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். "இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் "சத்திய ஞான தர்ம சபை" என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது.

சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல் - காரணம் என்ன ? | Tasmac Stores In Chennai Today Closed

மதுபானக் கடைகள் மூடல்

 இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை ஒட்டி பிப்.5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.