மக்கள் நினைத்தால் டாஸ்மாக் கடைகள் திறப்பை தடுக்கலாம் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Notice டாஸ்மாக் கடைகள் தமிழக அரசு அறிவிப்பு Tasmac-Store Stop-Openings Government-of-Tamil Nadu திறப்பை தடுக்கலாம்
By Nandhini Mar 03, 2022 05:14 AM GMT
Report

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்று தமிழக அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும்.

மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான அனுமதி அளிப்பது குறித்து ஆட்சியர்களுக்கு வழிக்காட்டுதல் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத் தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்தித்தம் விதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

மக்கள் நினைத்தால் டாஸ்மாக் கடைகள் திறப்பை தடுக்கலாம் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு | Tasmac Store Stop Openings Tamilnadu Government