டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறங்கள் - சொன்னது யார் தெரியுமா?

tasmac mkstalin arjunsampath கள் இறக்கும் போராட்டம் அர்ஜூன் சம்பத் மு.க.ஸ்டாலின்
By Petchi Avudaiappan Dec 12, 2021 12:59 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழக முதலமைச்சர் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்து மக்கள் கட்சி சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் தென்னை, பனை விவசாயிகள் கள்ளுக்கடையை திறக்கவும், கள் இறக்க அனுமதியும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் தமிழக கள் இயக்கம் சார்பில் வருகிற ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.