காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க கோரிக்கை - அமைச்சர் முத்துசாமி பேட்டி

Government of Tamil Nadu
By Thahir Jul 10, 2023 10:37 AM GMT
Report

காலை 7 முதல் காலை 9 மணி வரை டாஸ்மாக் திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

உரிமம் இன்றி பார் நடத்தினால் நடவடிக்கை 

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை குறித்து பல்வேறு முக்கிய நிர்வாகிகளுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

Tasmac Shop Opening Hours Changed Minister Speech

டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி (உரிமம்) பெற்றவர்கள் மட்டுமே பார் நடத்த முடியும். உரிமம் இன்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூடுதலாக பார் தேவைப்படும் இடங்களில் நீதிமன்ற வழக்கிற்கு பின் அனுமதி வழங்கப்படும். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட இடங்களில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

வருமானம் ஈட்டுவது அரசின் நோக்கம் இல்லை 

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் குடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே. டாஸ்மாக் வருமானத்தை கூடுதலாக்க வேண்டும் என்பதற்காக விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை.

என்ன காரணங்களுக்காக மதுபான விற்பனை குறைகிறது என்பது குறித்து ஆய்வு செய்யவே டார்கெட் உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது என்பது அரசின் நோக்கம் அல்ல என்றார். 

மேலும், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மக்கள் விரும்புகின்றனர். டெட்ரா பேக்கில் மதுபானம் கொண்டு வந்தால் பாட்டில் பயன்பாட்டை குறைக்கலாம். சட்ட விதிகளை மீறாமல், மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் திறப்பு நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். காலை 7 முதல் காலை 9 மணி வரை டாஸ்மாக் திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வருவதாகவும் தெரிவித்தார்.