தமிழ்நாட்டில் முழு ஊரடங்கி எதிரொலி: புதிய உச்சம் தொட்ட டாஸ்மாக் விற்பனை

Corona Lockdown Tasmac
By mohanelango May 09, 2021 07:27 AM GMT
Report

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10-ம் தேதி மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனால் நேற்றும் இன்றும் கடைகள் மாலை வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.