2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக்கில் வரலாற்று சாதனை
தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
மது விற்பனை
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் நடப்பு ஆண்டு 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இதில் சென்னை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 98.75 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதே போல் திருச்சி மண்டலத்தில் ரூ.85.13 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.95.87 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.79.59 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.76.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மேலும் மனமகிழ் மன்றங்களில் கடந்த 14-ந்தேதி ரூ.33.16 கோடிக்கும், 15-ந்தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
போகிப்பண்டிகையான 14ம் தேதி ரூ. 217 கோடிக்கும், பொங்கல் பண்டிகை தினமான 15ம் தேதி ரூ. 301 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.