தீபாவளி அன்று டாஸ்டாக்கில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை

Diwali Tasmac Sales Day
By Thahir Nov 05, 2021 08:00 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுப்பான பார்கள் பல மாதங்களுக்கு பின்னர் சில தினங்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் தமிழகத்தில் தீபாவளியையொட்டி 2 நாளில் டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின,

கடந்த 3-ம் தேதி ரூ 205.61 கோடிக்கும், 4-ம் தேதி ரூ 225.42 கோடிக்கும் டாஸ்மாக்கில் மது விற்பனையாகின டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலம் - ரூ51.68 கோடி, திருச்சி மண்டலம் - ரூ47.57, சேலம் மண்டலம் - ரூ46.62 சென்னை மண்டலம் - ரூ 79.84, கோவை மண்டலம் 74.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

கடந்த தீபாவளிக்கு ரூ 467.69 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்தாண்டு ரூ 431.03 கோடிக்கு மதுவிற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.