டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் கருத்து

people protest close order tasmac
By Praveen Apr 17, 2021 11:00 AM GMT
Report

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது டாஸ்மாக் கடை மீது கல்வீசியதாக 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது, கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வருமானத்தைப் பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு எனக் கூறி, மனுதாரர் உட்பட 10 பெண்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.