தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை - முதல் இடத்தை பிடித்த மதுரை மதுபிரியர்கள்!

open tasmac yesterday sales list
By Anupriyamkumaresan Jun 15, 2021 09:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூன் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.

கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூர், நீலகிரி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி, நேற்று 27 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மதுக்கடைகள் சில்லறை விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை - முதல் இடத்தை பிடித்த மதுரை மதுபிரியர்கள்! | Tasmac Open Yesterday Sales Rate List

அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றதால் அரை மணி நேரத்தில் சரக்குகள் விற்று தீர்ந்தது. இதனால் அப்பகுதி மது பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.