தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் - டாஸ்மாக் கடைகளின் நேரம் என்ன?
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் உணவகங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதுவும் செயல்பட அனுமதியில்லை. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளான மருத்தகங்கள், பங்குகள், உள்ளிட்டவை சேவைகள் இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் குழப்பம் நிலவியது. இதனிடையே ஏற்கெனவே , இரவு 10 மணி வரைதான் டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருவதால் அதே நேரம் தொடரும் என கூறப்படுகிறது.