விலை உயரும் டாஸ்மாக் மதுபானங்கள் - அதிர்ச்சியில் மதுபிரியர்கள்
தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு செப்டம்பர் 1 ஆம் தேதியான நாளை முதல் அமலுக்கு வரும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு மொத்த விற்பனை கூடங்களிலும், தனியார் பார்கள், கிளப்களிலும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதால் மதுபிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.