ஊரடங்கால் களைகட்டிய டாஸ்மாக் - நேற்றைய வசூல் எவ்வளவு தெரியுமா?
இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகளில் நேற்றே கூட்டம்களை கட்டியது.
இந்த நிலையில் நேற்று மட்டும் மது பானக் கடைகளில் அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடைகள், டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இன்று மது பானக் கடைகள் இருக்காது என்பதால் மது பிரியர்கள் நேற்றே தேவையான மதுவை வாங்க டாஸ்மாக்கில் குவிந்தனர்.
நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள மது பனாக் கடைகளில் மொத்தமாக ரூ.252 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.58.37 கோடிக்குவிற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.