நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் - வெளியானது அதிரடி அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.இதையடுத்து மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,நாமக்கல்,திருப்பத்துார்,தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள்,மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் இவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்றும் மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
இதை மீறி மது விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.