டாஸ்மாக் பார்களுக்கு புதிய விதிமுறைகள்.. 100 மீட்டர் சுற்றளவில் அமைக்க அனுமதி
தமிழகத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறை
டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே இதுவரை பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார் அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேலும், பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய டெண்டர் விதிமுறைகள் மூலம், இதுவரை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தி வந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் மூலம் புதிய நபர்களும் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய உரிமக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் வரை பார்களின் இயக்கம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதேநேரத்தில், பார்களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
சொத்து வரி விதிப்பு! IMF - இன் வலியுறுத்தலுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு IBC Tamil