டாஸ்மாக் பார்களை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Closed Bar Tasmac Madras High Court Order
By Thahir Feb 04, 2022 05:27 AM GMT
Report

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவர் பிறப்பித்த தீர்ப்பில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.