மக்களை பாதிக்காமல் கட்டண உயர்வு என்பது அப்பட்டமான பொய் - ஓ.பன்னீர்செல்வம்..!

O Paneer Selvam DMK AIADMK
3 நாட்கள் முன்

மக்களை பாதிக்காமல் கட்டண உயர்வு என்பது திமுகவின் அப்பட்டமான பொய் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,பேருந்து கட்டண உயர்வு என்றாலே மக்களை கண்டிப்பாக பாதிக்கும்.

அதிலும் மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு இருக்கும் என்பது திமுக அரசின் அப்பட்டமான பொய் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.