''கால்பந்து வீராங்கனைகள் திருமணத்துக்கு தகுதியற்றவர்கள் '' - சர்ச்சையை கிளப்பிய பெண் ஜனாதிபதி
கால்பந்து வீராங்கனைகள் குறித்து தான்சானியா பெண் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹாசன், கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தேசிய ஆண்கள் அணி வெற்றி பெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய போது கால்பந்து வீராங்கனைகளுக்கு ஆண்களை போன்று உடல் அமைப்பு இருப்பதால் அவர்கள் பெண்கள் கிடையாது அவர்களது முகங்கள் தான் பெண்கள் போன்று இருக்கும் என கூறிய அவர்.
கால்பந்து வீராங்கனைகளுக்கு ஒரு பெண்ணுக்கு உரிய குணங்கள் மறைந்துவிட்டதாகவும் கால்பந்து வீராங்கனைகள் வெற்றி பெற்று நாட்டிற்கு கோப்பைகளை கொண்டு வரும்போது ஒரு தேசமாக நமக்கு பெருமையாகதான் உள்ளது.
ஆனால் அவர்களது எதிர்காலத்தை பார்க்கும் பொழுது மன்னிக்கவும் வருத்தமாக இருப்பதாக கூறினார். மேலும் கால்பந்து வீராங்கனைகள் மனைவியாக ஒரு ஆணின் வீட்டிற்கு செல்லும் போது அவர் ஆணா? பெண்ணா? என கேள்வி எழுப்புவார்கள் என்று அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் பேசியுள்ளார்.
????????
— Mwanahamisi Singano (@MSalimu) August 22, 2021
??♀️??♀️??♀️??♀️ pic.twitter.com/oU0lOUJ0v3
பெண் அதிபரின் இந்த கருத்துக்கு இணையவாசிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணாக இருந்து கொண்டே பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு கருத்து கூறுவது எந்த மாதிரியான மனநிலை? என பலர் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.
மேலும்தான்சானியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற விரும்புகிறாரா. இவருக்கும் தாலிபான்களுக்கும் வித்தியாசம் இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.