கார் விபத்தில் பிரபல நடிகை சிக்கினார் - ரசிகர்கள் அதிர்ச்சி

By Nandhini May 04, 2022 08:58 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா கோவிலுக்கு செல்வதற்காக காரில் சென்றிருக்கிறார். அப்போது, காரில் பிரேக் வேலை செய்யாததால் கார் விபத்துக்குள்ளானது. இதில் தனுஸ்ரீ தத்தா காயம் அடைந்தார்.

இது குறித்து புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து காயமடைந்த நடிகை தனுஸ்ரீ கூறுகையில், கோவிலுக்கு செல்லும்போது எனக்கு கார் விபத்து ஏற்பட்டது. எலும்பு முறிவு இருக்கக் கூடாது என்று நான் அடிபட்டபோது பிரார்த்தனை செய்தேன். நல்லவேளையாக எலும்பு முறிவு இல்லை. என் காலில் இருக்கும் அதிகமான கொழுப்பால் எலும்பு முறியவில்லை. குண்டாக இருப்பதாலும் ஒருவகையில் நன்மைதான் போல என்று தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் பிரபல நடிகை சிக்கினார் - ரசிகர்கள் அதிர்ச்சி | Tanushree Dutta