சென்னை விமான நிலையத்தில் 2 சர்வேதேச கடத்தல்காரர்கள் கைது

chennai drug interational dealers
By Praveen May 07, 2021 04:16 PM GMT
Report

தாண்சானியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.100 கோடி மதிப்புடையை 15.6 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,தாண்சானியா நாட்டை சோ்ந்த ஒரு பெண் உட்பட 2 சா்வதேச போதை கடத்தல்காரா்கள் கைது.

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் இன்று சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும்,சா்வதேச போதைகடத்தும் கும்பல் இதில் ஈடுப்பட்டுள்ளதாகவும் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த விமானத்தில் வந்திறங்கிய 113 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனா்.அதோடு சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி,அவா்கள் உடமைகளை சோதனையிட்டனா்.அப்போது தாண்சானியா நாட்டை சோ்ந்த டொபோரா இளையா(46) என்ற பெண் பயணி,அவருடன் வந்திருந்த பிலீக்ஸ் ஒபடியா(45) ஆகிய இருவா் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

அவா்கள் தாண்சானியா நாட்டிலிருந்து கத்தாா் நாட்டிற்கு வந்து,அங்கிருந்து இந்தியாவின் சென்னை வந்து,இங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் கா்நாடகா மாநிலம் பெங்களூா் செல்வதற்கான விமான டிக்கெட்கள் வைத்திருந்தனா். அவா்கள் இருவரையும் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதையடுத்து அவா்கள் வைத்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்களை சோதனையிட்டனா்.

அதனுள் ரகசிய அறைக்குள் ஹெராயின் போதைப்பவுடா் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.இருவரின் சூட்கேஸ்களிலிருந்து மொத்தம் 15.6 கிலோ ஹெராயின் போதைப்பொருளை சுங்கத்துறையினா் கைப்பற்றினா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.100 கோடி. இதையடுத்து சுங்கத்துறையினா் பெண் உட்பட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

இவா்கள் இருவரும் சா்வதேச போதை கடத்தும் கும்பலை சோ்ந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது.இவா்கள் சென்னை வழியாக கா்நாடகா மாநிலத்திற்கு இதை கடத்தி செல்வதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்படது சமீப காலத்தில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.கைதான இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் 2 சர்வேதேச கடத்தல்காரர்கள் கைது | Tansaniya Chennai International Drug Dealers