சதய விழா கொண்டாட்டம்: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோயில்
தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் கொண்டாப்படுவது வழக்கம். அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படுகிறது. இன்று நடக்கும் விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாமன்னனர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார்]. அதனை தொடர்ந்து பெருவுடையாருக்க 48 வகையான அபிஷேங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதன் புகைப்படம் காண்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது.