போலீசாரை மிரட்டிய நந்தினியின் வாழ்வில் இப்படியொரு சோகமா? கெஞ்சிய குடும்பத்தினர்
தஞ்சாவூரில் முக கவசம் அணியாமல் வந்த போது, போலீசார் மடக்கி பிடிக்க, அவர்களை தரக்குறைவாக திட்டிய இளம்பெண்ணை மன்னித்து விடும்படி அவரது அண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது முக கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் இளம்பெண் ஒருவர் வந்துள்ளார்.
அவரை போலீசார் மடக்கிபிடித்து, அபராதம் கட்டும்படி கூறவே, மிகவும் தரக்குறைவாக பேசினார், இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
இதனை தொடர்ந்து அப்பெண் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர், முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சியாக்கி என்ற நந்தினி என தெரியவந்தது.
BSC கம்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள நந்தினி சென்னையில் வேலை பார்த்து வந்ததும், தற்போது குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, நந்தினி Bipolar Disorder எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.
இதற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்பித்த நந்தினியின் அண்ணன், மூன்று வருடமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா என்றாலே அவளுக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய தங்கையை குழந்தை போன்று பார்த்து வருவதால், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இப்படியொரு நோய் இருக்கும் போது அவரை தனியாக வாகனம் ஓட்ட அனுமதித்தது ஏன்? என போலீசாரும், மருத்துவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.