தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை தகவல் ஆணையர் வேப்பிலையுடன் வந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிளான பொதுதகவல் அலுவலர்களுடனான கூட்டத்தில் மாநில தலைமை தகவல் ஆணையர் கையில் வேப்பிலையுடன் வந்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் வியப்பை ஏற்ப்படுத்துயது.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா வேகமாக பரவிவரக்கூடிய வேளையில் அரசு போதிய விழிப்புணர்வுகளும் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது தகவல் கூட்டத்தில் ஆணையர் ராஜகோபால் கலந்து கொண்டார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் ,கூட்டம் நடைபெற்ற அரங்கு உட்பட பல இடங்களில் வேப்பிலை தோரனையாக தொங்கவிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் பயனித்த கார் கூட்டம் நடைபெற்று முடிந்து வெளியே வரும்போதும் வேப்பிலையால் வாயை மூடிக்கொண்டு வெளியே வந்ததால் அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்ப்படுத்தியது.