பெண்கள் குளிப்பதை பார்க்க பாத்ரூமில் வெப்கேம் வைத்த போலீசாரின் மகன் - அதிர்ச்சி சம்பவம்
தஞ்சாவூர் அருகே பக்கத்து வீட்டில் குளியல் அறையில் வெப்கேம் வைத்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது குளியல் அறையில் ஏதோ மின்னுவது போல தெரிந்துள்ளது.
இதனை கண்டதும், வெங்கடேசனின் மனைவி கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர், குளியலறையில் சென்ற பார்த்தார். அப்போது அங்கு வெப்கேமரா ஒன்று பவர் பேங்க்குடன் இணைந்து இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் எதிர்விட்டை சேர்ந்த நசீர் அகமது என்பவர் வெங்கடேசனின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை படம் பிடிக்க வெப்கேம் பொருத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை கேட்டு கடுப்பான வெங்கடேசன் எதிர்வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். நசீரின் தந்தையோ ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆவார். அதனால் அவர்களோ திமிறாக பதிலளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தலைமறைவான நசீரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.